திருச்சி: ஏசி மெஷினில் காப்பர் வயர்களை திருடிய நபர் கைது

திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் ரோடு சஞ்சீவி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவர் திருச்சி தஞ்சாவூர் ரோடு அரியமங்கலம் ரயில் நகர் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். மார்ச் 21ஆம் தேதி இரவு வங்கியை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் கடந்த 24ஆம் தேதி காலை வங்கிக்கு வந்து ஏசியை ஆன் செய்தார். ஆனால் ஏசி செயல்படவில்லை. ஏசி எந்திரத்தில் இருந்த காப்பர் வயர்கள் திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து, திருச்சி தாராநல்லூர் வீரமாநகரை சேர்ந்த வெங்கடேசனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 5 ஏசி காப்பர் வயர்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி