திருச்சி மாவட்டம் முசிறி அருகே கொளக்குடி துணை மின் நிலையத்தில் இன்று (நவம்பர் 13) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அம்மன்குடி, பூலாஞ்சேரி, அப்பணநல்லூர், தும்பலம், நாடார்காலனி, சேருகுடி, சூரம்பட்டி, கேணிப்பள்ளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் தடைபடும் என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.