முசிறியில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்த போராட்டம்.

திருச்சி மாவட்டம் முசிறியில், ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தாலுகா அலுவலகத்தில் நில அளவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரியும், ஆசிரியர்களுக்கு உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பணிகளும், நில அளவை பணிகளும், பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி