திருச்சி மனைவியுடன் தகராறு கணவன் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எம் கூடலூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர், மது போதைக்கு அடிமையானதால் மனைவி சன்மதிக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் சன்மதி தனது குழந்தைகளுடன் தாய் வீட்டுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. மனமுடைந்த ஸ்ரீதர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த ஜீயபுரம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி