முசிறி அருகே மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன் கைது

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தேவானூரைச் சேர்ந்த விஜய்-ஆர்த்தி தம்பதியினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆர்த்தி சூரம்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று (பிப்.23) அங்கு சென்ற விஜய், ஆர்த்தியுடன் தகராறில் ஈடுபட்டு அரிவாளால் வெட்டியதில் அவர் படுகாயமடைந்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் ஆர்த்தி சிகிச்சை பெற்று வரும் நிலையில் கணவர் விஜய் கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி