முசிறியில் நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த வீடு

திருச்சி மாவட்டம் முசிறி பரிசல்கார தெருவில் நேற்று இரவு சுதாகர் என்பவரின் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வீட்டில் இருந்த உபயோகப் பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக, உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்கு வந்த முசிறி போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி