கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருச்சி காந்தி சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. திங்கள்கிழமை ஒரே நாளில் அனைத்து பூக்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கார்த்திகை மாதத்தில் வழக்கமாகவே பூக்கள் விலை உயரும் நிலையில், இந்தாண்டும் பனி, மழை காரணமாக பூ வரத்து குறைந்துள்ளது. மேலும், ஐயப்ப பக்தர்களின் தேவை அதிகரித்துள்ளதால், மல்லிகைப்பூ ரூ.1,200-லிருந்து ரூ.1,800 ஆகவும், முல்லைப்பூ ரூ.1,000-லிருந்து ரூ.1,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.