விழாவை முன்னிட்டு வணிகர்கள் சங்கத்தின் சார்பில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூத்தட்டுகள் எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். பின்னர் பூத்தட்டு ஊர்வலம் தொட்டியம் மதுரை காளியம்மன் கோயிலை வந்தடைந்தது. அப்போது சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் மதுரை காளியம்மனுக்கு பக்தர்கள் எடுத்து வந்த பூக்களை அர்ச்சனை செய்து பூச்சொரிதல் நடைபெற்றது. முன்னதாக ஊர்வலத்தில் செட்டிங் அலங்காரத்தில் மதுரை காளியம்மனும், சங்கு சக்கரத்துடன் கிருஷ்ண பரமாத்மா உருவச் சிலையும் சென்றது காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் பூத்தட்டு ஊர்வலத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாத விதமாக முசிறி போலீஸ் டிஎஸ்பி சுரேஷ்குமார் மேற்பார்வையில் தொட்டியம் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்