முசிறி அருகே நெய்வேலி ஏரி நிரம்பியது; விவசாயிகள் மகிழ்ச்சி

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் நெய்வேலி கிராமத்தில் 151 ஏக்கர் பரப்பளவில் நெய்வேலி ஏரி அமைந்துள்ளது. கொல்லிமலையில் தொடர் மழை பெய்ததால் அய்யாற்றில் துறையூர் வட்டத்தின் வழியாக வந்து திருத்தலையூர் ஏரி பேரூர் ஏரி நிரம்பி நெய்வேலி ஏரிக்கு வந்தடைந்தது. தற்போது நெய்வேலி ஏரி நிரம்பியுள்ளது. இந்த ஏரியின் பாசன பரப்பு 234 ஏக்கர்கள் ஆகும். 

இந்த ஏரியின் தண்ணீர் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் நெய்வேலி பூசாரிப்பட்டி கோமங்கலம் தின்னகோணம் வீரமணிபட்டி கிராமங்கள் பயனடையும். ஏரியின் கரைகள் பாதுகாப்பாக உள்ளதா என அரியாறு உபநில கோட்ட உதவி பொறியாளர் மோகன்ராஜ் மற்றும் பணி ஆய்வாளர் கணேசன் ஆகியோர் பார்வையிட்டனர். ஏரி நிரம்பியதால் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து விவசாய பணிகளை விரைந்து செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி