இதனிடையே நேற்று காலை சுமார் 6.30 மணி அளவில் பாலச்சந்திரன் கீதா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த பாலச்சந்திரன், கீதாவை அரிவாளால் கழுத்தில் வெட்டி கொலை செய்துள்ளார். இதோடு மட்டுமல்லாமல் வாளவந்தியில் தனது வீட்டு அருகில் உள்ள ரமேஷ் என்பவருடன் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
பின்னர் ஜெம்புநாதபுரத்தில் இருந்த ரமேஷை தேடிச் சென்று தலையில் வெட்டி உள்ளார். இதனை அறிந்து அருகில் இருந்தவர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் இறந்து விட்டார். இரட்டை கொலை செய்துவிட்டு பாலச்சந்திரன் ஜெம்புநாதபுரம் காவல் நிலையத்தில் அரிவாளுடன் சரணடைந்தார்.
சம்பவம் நடந்த இடத்தை முசிறி டிஎஸ்பி (பொ) ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் கதிரேசன், அனந்த பத்மநாபன் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் முசிறி பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்படுத்தியது. கொலையாளி பாலச்சந்திரன் ஏற்கனவே வாளவந்தியில் நடந்த இரட்டை கொலையில் 2003ஆம் வருடம் 15 வருட சிறை தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.