விழாவை முன்னிட்டு 30 மற்றும் 31 அடி உயரமுள்ள மிகப்பெரிய இரண்டு தேரையும் பக்தர்கள் தோளிலும், தலையிலும் சுமந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தனர். பெரிய தேரில் ஓலைப்பிடாரியம்மன், சின்ன தேரில் மதுரை காளியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்நிலையில் மேலகார்த்திகை பட்டி, கீழகார்த்திகைபட்டி ஆகிய பகுதியில் இருந்து பக்தர்கள் திரளானோர் மேளதாளம் முழங்க ஆடல், பாடல் உடன் பூத்தட்டு மாலைகள் ஊர்வலமாக எடுத்து வந்து திருத்தேருக்கு சாற்றினர்.
அப்போது திருச்சி சரக டிஐஜி வருண்குமார் நேரடி மேற்பார்வையில், திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பி செல்வ நாகரத்தினம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு பணியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.