திருச்சி: ரூ.10 லட்சம்; நுகர்வோர் கோர்ட் அதிரடி உத்தரவு

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள ஒக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் சிங்காரம் இவர் தனக்கு சொந்தமாக ரெங்கநாதபுரம் முருகன் நகரில் உள்ள 3610 சதுரடி இடத்தில் வீடு கட்ட முடிவு செய்து புத்தனாம்பட்டியை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் 25 லட்சத்தில் ஆறு மாதத்திற்குள் வீட்டை கட்டி முடிக்க ஒப்பந்தம் போடப்பட்டது. மொத்தம் 27 லட்சம் பணம் பெற்ற நிலையில் தனியார் கட்டுமான நிறுவனம் பணிகளை முடிக்காமல் இருந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான சிங்காரம் இதுகுறித்து திருச்சி நுகர்வோர் நீதிமன்றத்தில் 8.1.2025 அன்று மனு தாக்கல் செய்தார். 

மனுவை விசாரித்த நீதிமன்றம் விசாரணை முடிந்த நிலையில் கட்டுமான நிறுவனம் ஏற்படுத்திய மன உளைச்சல் மற்றும் சேவை குறைபாட்டிற்காக பாதிக்கப்பட்டவருக்கு 10 லட்சம் மற்றும் நிலுவையில் உள்ள பணிகளுக்காக 7 லட்சம் வழக்கு செலவு தொகையாக 10 ஆயிரத்தையும் சேர்த்து 45 நாட்களுக்குள் ஒன்பது சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தது.

தொடர்புடைய செய்தி