திருச்சி கண்டோன்மென்ட் பாரதியார் சாலை பால் செமினரி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பிரபாகரனின் மகன் தீபன் (24), பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பி.காம் படித்து வந்தார். நேற்று (ஏப்ரல் 8) திருச்சி-திண்டுக்கல் ரோடு கருமண்டபம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி எதிரே திடீரென மயங்கி விழுந்த அவரை நண்பர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.