சமயபுரம் அருகே அகிலாண்டபுரம் பகுதியில் உள்ள பட்டறையில், சுற்றுலா பேருந்து ஒன்றில் மின்சாரப் பணிகள் நடைபெற்று வந்தபோது, பேட்டரியில் கசிவு ஏற்பட்டு பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் பேருந்து முற்றிலும் சேதமடைந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.