பேரணி பசுமையான மற்றும் ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்கவும், உடற்பயிற்சியை தினசரி அங்கமாக உருவாக்கவும், பிட் இந்தியா மிஷனில் ஒரு பகுதியாக சைக்கிள் ஓட்டும் பிரச்சாரத்தை துவங்கினர். பேரணியில் தபால்காரர்கள் மற்றும் கிராமிய அஞ்சல் துறை ஊழியர்கள் கலந்து கொண்டு சைக்கிள் ஓட்டி சென்று பொதுமக்களுக்கு உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் பேரணியில் பொதுமக்களுக்கு உடற்பயிற்சியின் அவசியம் மற்றும் அஞ்சல் துறை திட்டங்கள் குறித்த பிரசுரங்கள் வழங்கப்பட்டன. பேரணி முசிறி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. பாதுகாப்பு ஏற்பாடுகளை முசிறி போலீசார் செய்திருந்தனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்