திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம், முசிறி சட்டமன்றத் தொகுதியின் முசிறி கிழக்கு ஒன்றிய மற்றும் நகர கழக நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நகரச் செயலாளர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் என். யோகநாதன் கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். கூட்டத்தில், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும் என்றும், கட்சியில் உண்மையாக உழைப்பவர்களுக்கு கட்சிப் பணிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.