திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே வீரப்பூரிலிருந்து இன்று மதியம் மணப்பாறை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது கணக்குபிள்ளையூர் அருகே வந்த போது அவ்வழியே வந்த டூவிலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டூவீலரில் வந்த பண்ணப்பட்டி அமயபுரத்தை சேர்ந்த ரவிச்சந்திரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதில் ரவிச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து அறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.