அப்போது அந்த வழியாக வந்த கார் போலீசார் தடுத்து நிறுத்தியும் நிற்காமல் தடுப்பு கம்பிகளை இடித்து மோதி விட்டு வேகமாக சென்றது. இதையடுத்து போலீசார் அந்த காரினை 10 கிலோமீட்டர் தூரம் காரில் துரத்தி சென்று காரை போலீஸார் மடக்கி பிடித்தனர். அப்போது காரை நிறுத்தி சோதனை இட்டதில் காரில் மூட்டை மூட்டையாக போதை புகையிலை பொருட்கள் சுமார் 460 கிலோ இருந்தது. பறிமுதல் செய்யப்பட்ட போதை புகையிலை மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் ஆகும்.
இதையடுத்து கார் மற்றும் கடத்தல் காரர்களை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் போதை புகையிலை பொருட்கள் பெங்களூரில் இருந்து தமிழகத்திற்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்டது என்பதும், காரில் இருந்தவர்கள் பிரஞ்சுவால் (21), உமேஷ் (24) என்பது தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.