தொட்டியம்: வேன் கவிழ்ந்து விபத்து; 15 பெண்கள் காயம்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியம் பாலபட்டியில் இருந்து டிராவல்ஸ் மூலம் நேற்று சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு 15 பெண்கள் சென்றனர். வேனை பரமத்தி வேலூர் அனுப்பூரைச் சேர்ந்த ஓட்டுனர் சரத்குமார் ஓட்டி வந்தார். 

வேன் திருச்சி - நாமக்கல் சாலையில் மேக்கல்நாயக்கன்பட்டி கீழ்புறம் உள்ள பாலம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

வேனில் ஓட்டுனர் உள்பட 15 பெண்கள் அனைவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் திருச்சி - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

தகவல் அறிந்த காட்டுப்புத்தூர் காவல் உதவி ஆய்வாளர் ராதா மற்றும் சக்தி விநாயகம் ஆகியோர் காயம் பட்டவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி