துவரங்குறிச்சி பேருந்தில் பயணம் செய்தவர் மரணம்

தென்காசி மாவட்டம் வேதாம்புதூர் பகுதியைச் சேர்ந்த முத்துராமன், சென்னையில் பணிபுரிந்து வந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர், சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். துவரங்குறிச்சி பகுதியில் பேருந்து டீக்கடையில் நின்றபோது, சக பயணிகள் இறங்கியுள்ளனர். அப்போது முத்துராமன் பேச்சு மூச்சின்றி கிடந்ததை ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கண்டனர். அருகில் சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். இது குறித்து துவரங்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி