மணப்பாறை அருகே இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை

மணப்பாறை அருகே புத்தாநத்தம் தெற்கு தெருவைச் சேர்ந்த ராஜேஸ்வரிக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தன. திருமணத்தில் விருப்பமில்லாததால் மன உளைச்சலில் இருந்த அவர், கடந்த 2ஆம் தேதி பூச்சிக்கொல்லி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புத்தாநத்தம் போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி