இதனால் மனவேதனை அடைந்த சகாயராணி கடந்த மாதம் 13ஆம் தேதி யாரும் எதிர்பாராத வகையில் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு திருச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இவ்வாறு கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் சிகிச்சை பலனளிக்காமல் சகாயராணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தாய் டெய்சி புளோரா அளித்த புகாரின் அடிப்படையில் சமயபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.