திருச்சி திருவெறும்பூர் அருகே கீழவடகக்குளம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் தனது தாய் மலருடன் இருசக்கர வாகனத்தில் செட்டியார்பேட்டை பகுதிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையில் திடீரென குறுக்கே வந்த நாய் காரணமாக சக்திவேல் பிரேக் பிடித்ததில் இருவரும் கீழே விழுந்தனர். இதில் மலர் தலையில் பலத்த காயமடைந்து, அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து திருவரம்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.