திருச்சி: விஷம் குடித்து பெண் தற்கொலை

திருச்சி காஜாமலை காளியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் ஷெரீப். இவரது மனைவி ரகி முனிஷா (வயது 54). இவர் சர்க்கரை வியாதியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மன அழுத்தத்துக்கு ஆளான அவர் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். பிறகு உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ரகி முனிஷா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது கணவர் காதர் ஷெரீப் கொடுத்த புகாரின் அடிப்படையில் கேகே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி