திருச்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் ஆகிய பகுதிகளுக்கு நாளை (11ஆம் தேதி) குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். விற்குப்பேட்டை, மரக்கடை, மலைக்கோட்டை, சிந்தாமணி, உறையூர், பாத்திமா நகர், புத்தூர், மங்களம் நகர், கண்டோன்மென்ட், காஜாபேட்டை, ஜங்க்ஷன், கருமண்டபம், ராமலிங்க நகர், உய்யாகொண்டான் மலை உள்ளிட்ட பல பகுதிகளிலும் குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும்.