முதலமைச்சர் ஜோசப் விஜய், திருச்சி கிழக்குத் தொகுதியில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க வரும் திங்கள் கிழமை, ஜீன் ஒன்றாம் தேதி திருச்சி வருகிறார். மாலை 4 மணிக்கு திருச்சி வந்தடையும் அவர், புனித வளனார் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பங்கேற்பார். முதலமைச்சர் விஜய் வரும்போது யாரும் வாகனங்களில் அவரைப் பின்தொடர வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.