திருச்சி: குளியல் அறையில் மயங்கி விழுந்த பெண் சாவு

திருச்சி பீமநகர் மெயின் கண்டி தெருவைச் சேர்ந்த 52 வயதான சர்பு நிஷா, குறைந்த ரத்த அழுத்தத்தால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று குளியலறையில் மயக்கமடைந்த அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனையில் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி