திருச்சியில் நேற்று (பிப்ரவரி 28) செய்தியாளர்களை சந்தித்த தவெக தேர்தல் கண்காணிப்பாளர் கு.ப.கிருஷ்ணன், ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது அவரது தனிப்பட்ட விருப்பம் என்றும், அவரை திமுகவில் இணைத்துக் கொண்டது முதல்வர் ஸ்டாலின் விருப்பம் என்றும் தெரிவித்தார். மத்திய அரசை விமர்சித்த கருத்து தனது சொந்த கருத்து என்றும், கட்சியின் கருத்து அல்ல என்றும் அவர் விளக்கினார். மேலும், தமிழகத்தில் நடிகர் விஜய்க்கு போதிய பாதுகாப்பு இல்லை என்றும் அவர் கூறினார்.