திருச்சி SIR பணி‌: அதிமுக வாக்குவாதம் காவல்நிலையம் முற்றுகை

திருச்சி மாநகராட்சியின் 21-ஆவது வார்டில் வாக்காளர் படிவம் வழங்கும்போது, திமுக நிர்வாகி வாக்குச்சாவடி நிலை அலுவலர் அருகே அமர்ந்ததாகக் கூறி அதிமுகவினருக்கும் திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திமுகவின் புகாரில் அதிமுக நிர்வாகி ஒருவர் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார். இதை கண்டித்து, அதிமுக மாமன்ற உறுப்பினர் அரவிந்தன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் கோட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு அதிமுக நிர்வாகி விடுவிக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி