திருச்சி: தட்டு ரிக்ஷா தொழிலாளிக்கு அடி-உதை

திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் (வயது 47). இவர் தட்டுரிக்ஷா வாடகைக்கு கொடுத்து வருகிறார். இந்த நிலையில் பாலக்கரை சங்கிலியாண்டபுரம் மணல் வாரித்துறை ரோடு பகுதியைச் சேர்ந்த ரவுடி ரமேஷ் என்கிற துப்பாக்கிச் சூடுரமேஷ் சென்று பொருட்களை எடுத்துச் செல்வதற்காக தட்டுரிக்ஷாவை வாடகைக்கு கேட்டார். 

ஆனால் தங்கவேல் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் அவரை சரமாரியாக கைகளால் தாக்கிவிட்டு தப்பிச்சென்றார். இதில் அவரது நெற்றியில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தங்கவேல் பாலக்கரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பிஓடிய ரவுடி ரமேஷை தேடிவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி