படத்தை கார்த்திக் தம்பதியர்கள் தங்கள் குழந்தையுடன், குடும்பத்துடன் கண்டுகளித்தனர். பின்னர் குழந்தை ஹர்ஷித் தந்தை மிஸ்டர் இந்தியா கார்த்திக் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கடந்த ஐந்து வருடமாக திரைப்படத்தில் நடிக்க வேண்டுமென முயற்சி செய்து கொண்டிருந்தேன், ஏங்கிய நாட்கள் உண்டு. மிஸ்டர் தமிழ்நாடு மற்றும் இந்தியா ஆகிய பட்டங்களை வென்றுள்ளேன்.
நான் உழைத்த உழைப்புக்கு என்னுடைய மகனுக்கு 10 மாதத்தில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. மிகப்பெரிய நடிகருடன் நடித்திருக்கிறான். இத்திரைப்படத்தில் சத்யராஜ், யோகிபாபு, ஜெய் ஆகியோருடன் என் மகன் நடித்திருக்கிறான். தமிழ் திரை உலகில் நகைச்சுவை நடிகர் என்று சொல்லப்படுகிற அனைவரும் இணைந்து நடித்துள்ள ஒரு திரைப்படம் இதில் எனது மகன் நடித்திருப்பது மிகவும் பாக்கியமாக கருதுகிறேன் என தெரிவித்தார்.