திருச்சி: டாஸ்மாக் கடைகளை அகற்ற ஆட்சியரிடம் மனு

லால்குடி நகராட்சி தலைவர் துரைமாணிக்கம் தலைமை யில் லால்குடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் லால்குடி ரெயில்வே மேம்பாலம் அருகில் 2 டாஸ்மாக் கடைகள் (எண்: 10339, 10340) அடுத்தடுத்து உள்ளன. இதனால் ரெயில்வே சுரங் கப்பாதை வழியாக அருகில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மாணவிகள் செல்ல முடியவில்லை. மேலும் பிரசித்தி பெற்ற சப்தரிஷீஸ்வரர் கோவிலில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் அந்த கடைகள் ஒரே இடத்தில் அமைந்துள்ளன. இதனால் பொதுமக்கள் நிம்மதியாக செல்லமுடியவில்லை. எனவே பள்ளி மாணவ-மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள 2 டாஸ்மாக் கடைகளையும் நிரந்தரமாக மூடவேண்டும் என்று கூறி ஆட்சியரிடம் மனு அளித்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி