திருச்சி: குடிநீா் கேட்டு மக்கள் மறியல்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பண்ணப்பட்டி கிராமத்தில் கடந்த 15 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். புகார் அளித்தும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் இந்த போராட்டம் நடைபெற்றது. புத்தாநத்தம் போலீசார் குடிநீர் விநியோகம் முறைப்படுத்தப்படும் என உறுதி அளித்ததை அடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி