திருச்சி: காசோலை மோசடி வழக்கில் ஓராண்டு சிறை

மணப்பாறை அடுத்த சமுத்திரம் ஊராட்சி, பாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பூபதிக்கு, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஜியோா் ஜியுஸ் ராஜாமணி கடந்த 17.05.23 அன்று ரூ.10,00,000 கடன் பெற்றார். கடனைத் திருப்பிச் செலுத்தாமல், பூபதிக்கு வங்கிக் காசோலை கொடுத்தார். 25.10.23 அன்று காசோலை பணமின்றி திரும்பியதால், பூபதி மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கில், ஜியோா் ஜியுஸ் ராஜாமணிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து மணப்பாறை குற்றவியல் நடுவர் ஆர். அசோக்குமார் தீர்ப்பளித்தார்.

தொடர்புடைய செய்தி