திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற தனியார் துறைகளின் வேலைவாய்ப்பு முகாமை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், மாவட்ட ஆட்சியர் சரவணன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், பெரம்பலூர் எம்.பி. அருண் நேரு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முகாமைத் தொடர்ந்து, முதல் கட்டமாக வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.