திருச்சி லால்குடியில் உள்ள நீதிமன்ற வளாகம் கடந்த 10 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லாத வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதனை கண்டித்து, புதிய நீதிமன்ற வளாகம் கட்டித்தரக் கோரி திருச்சி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் 350-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், இது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணனிடம் மனு அளித்தனர்.