திருச்சி: துப்பாக்கி முனையில் பணம் பறித்தவர் மீது குண்டாஸ்

திருச்சி குழுமணி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் என்று ஆட்டோ சக்தி இவர் கொடியாலம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி 2350 ரூபாயை பறித்து சென்றார். இது குறித்து புகாரின் பேரில் ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேல் என்கிற ஆட்டோ சக்தியை கைது செய்தனர். 

மேலும் அவரிடம் இருந்து துப்பாக்கி, மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை மத்திய சிறையில் அடைத்தனர். இதை தொடர்ந்து சக்திவேல் என்கிற ஆட்டோ சக்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஜீயபுரம் போலீசார் திருச்சி மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினத்திடம் பரிந்துரை செய்தனர். 

இது தொடர்ந்து சக்திவேல் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதை அடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் அதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி