திருச்சிராப்பள்ளி பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர், பார்வையற்றோர்களுக்கு வேலைவாய்ப்பில் தடையாக இருக்கும் அரசாணை எண் 24ஐ திரும்பப் பெறவும், தனி இடஒதுக்கீடு வழங்கவும் கோரி மூன்றாவது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று மதியம் திருச்சி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர்.