மணப்பாறை நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நடும்விழா

இன்று 05.06.2025ம் தேதி காலை 10.00 மணியளவில் மணப்பாறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. 

அதில் மணப்பாறை சார்பு நீதிபதி ராஜசேகர், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜெயமுருகன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி திரு. தர்மசீலன், குற்றவியல் நடுவர் நீதிபதி அசோக்குமார் ஆகியோர்களும் மற்றும் மணப்பாறை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் செங்குட்டுவன், செயலாளர் மகேந்திரன், பொருளாளர் விஜய், துணைத் தலைவர் வள்ளிக்கண்ணு, இணைச் செயலாளர் முல்லைசந்திரசேகர், நூலகர் கோபாலகிருஷ்ணன் உட்பட மூத்த மற்றும் இளம் வழக்கறிஞர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி