திருச்சி: விபத்தில் உருக்குலைந்த சுற்றுலா வேன்

திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (மே 26) நள்ளிரவு கீரனூரில் இருந்து திருச்சி நோக்கி வந்த சுற்றுலா வேன், குண்டூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனின் முன்புறம் கடுமையாக சேதமடைந்தது. படுகாயமடைந்த ஓட்டுநர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி