திருச்சி துவாக்குடி அக்பர் சாலை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் கன்னியாகுமரி மாவட்டம் ஈசானி மங்கலத்தைச் சேர்ந்த சபரீசன் மற்றும் தேனி மாவட்டம் வீரபாண்டியைச் சேர்ந்த சக்திவேல் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு, 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ராம்ஜி நகர் காந்தி நகர் பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த லோகநாதன் கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்து 140 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தமாக கஞ்சா விற்பனை செய்த மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.