திருச்சி பெரிய மிளகு பாறை புதுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகனுக்கு பொன்னகரைச் சேர்ந்த ரவுடி செல்வம் என்கிற வல்லரசு போதை மாத்திரை விற்றதாக தெரிகிறது. இது குறித்து அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபரின் தாயார் ராஜேஸ்வரி திருச்சி செசன்ஸா கோர்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் போதை மாத்திரை விற்ற ரவுடி செல்வம் என்கிற வல்லரசுவை போலீசார் கைது செய்தனர்.