மணப்பாறை அருகே சாலை வசதி வேண்டி சாலை மறியல்

மணப்பாறை மருங்காபுரி தெற்கு ஒன்றியம் கருமலையிலிருந்து மாங்கனாபட்டி செல்லும் சாலை மிகவும் மோசமானதாக உள்ளது. அந்த சாலையை சீரமைத்து தர அந்த பகுதி மக்கள் மணப்பாறை துவரங்குறிச்சி சாலையில் கருமலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

கருமலையிலிருந்து மாங்கனாபட்டி செல்லும் சாலையானது மிகவும் மோசமாக உள்ளதால் அதை சீரமைத்து தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் பலமுறை அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நிறைவேற்றப்படவில்லை. 

இச்சாலையை பொதுமக்கள் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் ஆகியோர் பயன்படுத்தி வரும் நிலையில் சாலை மிகவும் மோசமாக இருப்பதால் உடனடியாக அதை சரி செய்து கோரி மணப்பாறை துவரங்குறிச்சி சாலையில் உள்ள கருமலை பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி