திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கொடியாலம் கிராமத்தில் உள்ள அருள்மிகு மகாமாரியம்மன் கோவில் திருவிழாவை நடத்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை மற்றும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டும், கிராமத்தில் இரு குழுவினர் இடையே நிலவும் தகராறு காரணமாக திருவிழா நடத்தப்படாமல் உள்ளது. திருவிழாவை உடனடியாக நடத்த வலியுறுத்தி, கொடியாலம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.