துறையூர் அருகே காளிப்பட்டியில் அப்பாவுத்துறை என்பவர் மாரியம்மன் சிட் ஃபண்ட்ஸ் என்ற பெயரில் பொதுமக்களிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளார். கடந்த ஐந்து நாட்களாக கடையையும் வீட்டையும் பூட்டிவிட்டு தலைமறைவானதால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் வலியுறுத்தினர்.