திருச்சி: பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம்

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் வாளவந்தி ஊராட்சி களத்துப்பட்டி நியாய விலை கடையில் பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்ட வழங்கல் அலுவலர் சரவணன் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று தீர்வு கண்டார். சிறப்பு வருவாய் ஆய்வாளர் ஜீவா அனைவரையும் வரவேற்றார். 

பொதுமக்களிடமிருந்து பெயர் சேர்த்தல், நீக்கல், செல்போன் எண் மாற்றம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 50 மனுக்கள் பெறப்பட்டு அனைத்தும் தீர்வு காணப்பட்டது. முடிவில் விற்பனையாளர் ராகசுதா நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி