மணப்பாறை மேட்டுக்கடை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், அப்பகுதி மக்கள் இன்று டாஸ்மாக் கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும், பொதுமக்கள் சமாதானம் அடையாமல் உடனடியாக கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.