மணப்பாறை அருகே வாகனம் மோதி உயிரிழந்த மயில்

திருச்சி திண்டுக்கல் நெடுஞ்சாலையில் மணப்பாறை அருகே ஆலம்பட்டி புதூர் பகுதியில் சாலையை கடக்க முயன்ற மயிலை அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளாக்கியது. இதில் அந்த மயில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இந்த தகவல் அறிந்த நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மயிலின் உடலை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி