மணப்பாறை அருகே புத்தாநத்தம் கருமலையில் வெங்கடேஷ் என்பவருக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் சர்க்கரை தயாரிக்க பயன்படும் சீனி கரும்புகள் பயிரிடப்பட்டுள்ளது. கரும்பு பயிர்கள் விளைந்த அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் திடீரென தீ பற்றி மலமலவென எரியத் தொடங்கியது தகவல் அறிந்து துவரங்குறிச்சி தீயணைப்பு நிலையஅலுவலர் மனோகரன் மற்றும் சிறப்பு நிலைய அலுவலர் நாகேந்திரன் தலைமையான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர் இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள கரும்புகள் எரிந்து நாசமாயின எனக் கூறப்படுகிறது இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.