மணப்பாறையில் ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றபோது, பாஜக சார்பில் வைக்கப்பட்டிருந்த கொடி அகற்றப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் ரவுண்டானா அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். கொடியை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், நகராட்சி மற்றும் தமிழக அரசைக் கண்டித்தும் அவர்கள் முழக்கமிட்டனர். மணப்பாறை டிஎஸ்பி காவியா தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, பாஜகவினர் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.